2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

156ஆம் இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை- களுபோவில என்டர்சன் வீதி, விஷ்ணு ஆலயம் வரையான 156ஆம் இலக்க பஸ்போக்குவரத்து சேவை கடந்த 19 ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வீதி வழியிலான பஸ் போக்குவரத்து சேவையானது கடந்த பல காலங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்து. இதனால் தெஹிவளை விஷ்னு ஆலயத்திற்கு செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் ஐக்கிய சனசமூக அபிவிருத்தி சங்கத்தினர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் மேல்மாகாண சபை போக்குவரத்து அமைச்சினூடாக தொடர்பு கொண்டு எடுத்த துரித நடவடிக்கையின் பயனாக இச்சேவை கடந்த 19 ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X