Menaka Mookandi / 2011 மார்ச் 18 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

வலி. கிழக்கு வாழைக்குலை உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தினது கொழும்பு கிளையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திறந்து வைத்தார். இல.44, ஹம்டன் வீதி, வெள்ளவத்தையிலேயே இக்கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு உரையாற்றிய அமைச்சர், 'கடந்த காலங்களில் நாமே எமக்கான புதைகுழிகளை தோண்டியிருக்கின்றோம். தற்போது இந்நிலை மாறியுள்ளது. இந்த அமைதிச் சூழலை நாம் அனைவரும் பாதுகாக்கும் நிலையிலேயே ஒளிமயமான எதிர்காலம் நோக்கி எம்மால் பயணிக்க முடியும்' என்று தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்படும் வாழைக்குலை, வாழைப்பூ, வாழையிலை உள்ளிட்ட காய்கறிகளும் இவ்விற்பனை நிலையத்தினூடாக விற்பனை செய்யப்படவுள்ளன. இன்றைய நிகழ்வில் அமைச்சருடன் சட்டத்தரணி ஜெ.ரெங்கன், ஊடகவியலாளர் சு.வித்தியாதரன் உட்பட யாழ், கொழும்பு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago