2026 மார்ச் 21, சனிக்கிழமை

அநாதை இல்லங்களை ஒன்றிணைக்க நடவடிக்கை

Super User   / 2011 மார்ச் 21 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

இலங்கையிலுள்ள அநாதை இல்லங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் அநாதை பராமரிப்பு ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

குறித்த ஒன்றியம் அநாதைகள் தொடர்பான தகவல்களை மையப்படுத்தல், அநாதை இல்லங்களுக்கிடையிலான தகவல்களை பரிமாறல், அநாதை இல்லங்களை வலுப்படுத்தல் மற்றும் வளப்படுத்தல் போன்ற பல நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

இதற்கு மேலதிகமாக அநாதை சிறுவர்கள் மற்றும் அநாதை இல்லங்கள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கிய மென்பொருளொன்றையும் குறித்த ஒன்றியம் வெளியிடவுள்ளது.

இது தொடர்பில் அடுத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காகக  11 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டமொன்று வெள்ளவத்தை மோர் இஸ்லாமிய கலாசார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X