Super User / 2011 ஜூன் 03 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுஸைன், சுபுன் டயஸ்)
கட்டுநாயக்காவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து உயிரிழந்த ரொஷேன் சானக ரத்னசேகரவின் இறுதிக்கிரியை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதன்போது சுதந்திர வர்த்தக ஊழியர்கள் தமது சகாவான ரொஷேன் சானகவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு இன்று சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அராசங்கத்தை ஜே.வி.பி. சார்பான அனைத்து கம்பனி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை கத்தோலிக்க தேவாலயத்தில் இறுதிக்கிரியைகளுக்கு இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறுதிக்கிரியைகளில் தொழிற்சங்கத்தினரும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய பொலிஸார், இறுதிக்கிரியைகள் தவிர்ந்த வேறு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளனர்.
44 minute ago
49 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
4 hours ago