Menaka Mookandi / 2011 டிசெம்பர் 16 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
இந்துக்கல்வி சங்கத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளன.
வெள்ளவத்தை சம்மங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் சனிக்கிழமை 8.30 மணிக்கு நடைபெறும் வழிபாட்டுடன் இந்தக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நல்லூர் ஆதீன பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்குவார். சனிக்கிழமை நடைபெறும் மகாசபை கூட்டத்தில் இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதிபதியான சு.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்வார்.
அத்துடன், உயர்நீதிமன்ற நீதிபதியான கே.ஸ்ரீபவன், திருமதி ஸ்ரீபவன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago