Super User / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா )
கடற்றொழில் துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மீனவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பான மகஜரில் 10 இலட்சம் கையெழுத்துக்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன்பிடி சந்தை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து பெறும் வேலைத்திட்டத்தை மீன்பிடி தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேசிய மீனவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு கடற் பகுதியில் இந்திய மீன்பிடி ரோலர் படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன் பிடித்தலையும் இலங்கை மீனவர்களின் மீன் வலைகளை இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளினால் சேதமாகுதல் உட்பட மேலும் பல விடயங்களை குறிப்பிட்டே இந்த மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
20 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago