Super User / 2011 டிசெம்பர் 25 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு, தளுவகொட்டுவ பிரதேசத்தில் வானும் தனியார் பஸ் வண்டியும் மோதியமையினால் ஸ்தலத்தலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 0 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் தளுவகொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆணமடுவயிலிருந்து நீர்கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த டொயட்ட ரக வானுடன் கொழும்பிலிருந்து கல்பிட்டி நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வானின் சாரதியான மஹேஸ் விக்ரமசிங்க என்ற 29 வயதுடையவரே பலியானவராவார். இவர் கல்வல வீதி, அக்கரகம பிரதேசத்தை சேர்ந்தவராவார். குறித்த சம்பவத்தையடுத்து, கொச்சிக்கடை பொலிஸார் பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.
குறித்த சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)
20 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago