2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பாதாள உலகக் குழு நபர் சடலமாக மீட்பு

Super User   / 2012 ஜனவரி 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

பல குற்றச்செயல்கள் காரணமாக தேடப்பட்டு வந்த 'தாபரே' எனும் நபர் தலவத்துகொட கிம்புலாவெவ பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

40 வயதான இந்நபர் நேற்று காலை, பன்னிபிட்டிய- தலவத்துகொட பிரதான வீதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து கடத்தப்பட்டிருந்தார்.  இன்று காலை 7.00 மணியளவில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்நபர், தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட் பிரதேசத்தில் பல குற்றச்செயல்களை மேற்கொண்ட குழுவொன்றின் தலைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலை தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம். கருணாரட்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X