Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானைப் பகுதியில் 80 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இரத்மலானை ரயில்வே வேலைத்தலம் டெங்கு நுளம்பு பெருகும் இடமாக இருந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், டெங்குநோய்த் தாக்கத்திற்கு உள்ளான 14 பேர் களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி சமந்திக மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே வேலைத்தல அதிகாரிகளை தான் எச்சரித்தபோதிலும், நுளம்பு பெருகும் இடங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அவர்கள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.
நாட்டின் மிகப் பெரிய வேலைத்தலமாக கருதப்படுகின்ற இரத்தமலானை ரயில்வே வேலைத்தலம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
ஊழியர்கள் வேலை நேரத்தின் பின் இந்த வேலைத்தலத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கடினமாக வேலையின் பின் இப்பணியில் ஈடுபட முடியாது என ரயில்வே வேலைத்தல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வேலைத்தல வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் துப்பரவு செய்வதற்காக அதிகாரிகள் கடமை நேரத்தில் இரண்டு மணித்தியாலங்களை ஒதுக்கித் தந்தால் அந்த பணியில் ஈடுபடுவோம் எனவும் ரயில்வே வேலைத்தல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
2,500 ரயில்வே திணைக்கள ஊழியர்களில் 80 பேர் மாத்திரம் டெங்குநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தலைமைப் பொறியியலாளர் எஸ்.அபயவிக்கிரம கூறினார். (றேகா தரங்கனி)
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago