Super User / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதியொருவர் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஆயுதகுழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் வழக்கொன்றின் சந்தேக நபரான வி.என். சந்திரபால அல்லது தெமட்டகொட மேர்வின் அல்லது ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
மீரிஹான பொலிஸாரினால் கங்கொடவில நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றின் சந்தே நபரான அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரின் பிணை கோரிக்கை மனு தொடர்பான விசாரணைக்காக இன்று கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
அவருக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம் அனுமதியளித்தது. அதன்பின் பிணை ஆவணங்கள் தயாராகும் வரை சந்தேக பிரதம நீதவான் நீதிமன்ற கூண்டில் வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோதே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது.
வெள்ளை வானொன்றில் வந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் சிறை அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்துமிரட்டி, சந்தேக நபரை பலவந்தமாககொண்டு சென்றனர். சந்தேக நபரின் மனைவி இதை தடுக்கமுயன்றபோது அவரை மேற்படி குழுவினர் அப்பால் தள்ளிவிட்டு சந்தேக நபரை வானில் ஏற்றினர். பெரும் எண்ணிக்கையானோர் பார்த்துக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
1 hours ago
1 hours ago
Alga Monday, 13 February 2012 09:04 PM
ஆத்தாடி...., அப்பிடியே சினிமா படம் பாத்த மாதிரியெல்லோ கிடக்குது!
Reply : 0 0
ala Tuesday, 14 February 2012 04:43 AM
சினிமா பார்த்து பார்த்து எல்லாம் கெட்டுப் போய்விட்டது.
Reply : 0 0
hameed Tuesday, 14 February 2012 02:51 PM
நாட்டின் சட்டம் ஒழுங்கு நல்ல முன்னேற்றம் !!!!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago