Super User / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பான வழக்கில் துமிந்த சில்வாவின் தந்தையின்சார்பில் ஆஜரான வழக்குரைஞர், தான் துமிந்த சில்வாவின் தந்தையின் சார்பில் ஆஜராகுவதற்கு அவரின் சம்மதக் கடிதத்துடன் வந்திருப்பதாக நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த கடிதம் இன்மையால் தான் முன்னர் துமிந்த சில்வாவின் தந்தையின் சார்பில் ஆஜராக அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
'இந்த நீதிமன்றம் துமிந்த சில்வாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் மருத்துவ அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கையல் துமிந்த சில்வாவின் வாய்மொழி வாக்குமூலமும் எழுத்துவடிவ வாக்குமூலமும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்குரைஞரை தனது சார்பில் ஆஜராகுமாறு துமிந்த சில்வா வாய்மூலம் கூறியதை ஏற்க மறுத்துவிட்டது. நீதிமன்றம் மருத்துவரின் கூற்றை ஏற்றுக்கொண்டதைப்போல் தனது கூற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென வழக்குரைஞர் வாதிட்டார்.
வழக்குரைஞர் ஹேமந்த வர்ணகுலசூரியவின் வாதத்தை செவிமடுத் நீதவான் பிரசன்ன அல்விஸ், சட்டரீதியான பிழையேதும் காணப்படாதபோது தான் அளித்த தீர்ப்பை திருத்த தனக்கு நியாயாதிக்ககம் இல்லை எனக் கூறினார்.
இந்த விடயத்தை உயர் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லவிருப்பதாக கூறிய வழக்குரைஞர், விசாரணைகள், மருத்துவ அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை தனக்கு கட்டணம் பெற்று வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
பாரத லக்ஷ்மன் குடும்பத்தின் சர்பில் தோன்றிய அஜித் பத்திரன, துமிந்த சில்வாவின் தற்போதைய உடல்நிலை பற்றி கண்டறியுமாறு புலன்விசாரணைப் பிரிவினருக்கு நீதிமன்றம் பணிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
படுமோசமாக காயமடைந்த பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்தரான காமினி, நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் துமிந்த சில்வா தொடர்பில் இது நடக்கவில்லை என அவர் கூறினார்.
இந்த விடயத்தில் சட்டமா அதிபர் தனது அறிவுறுத்தலை இன்னும் வழங்கவில்லை எனவும் அறிவுறுத்தல் கிடைத்தவுடன் நீதிமன்றுக்கு அறிவிப்பதாகவும் புலன் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
சந்தேக நபர்களை பெப்ரவரி 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமறு நீதவான் உத்தரவிட்டார்.
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago