Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா )
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரை ஏமாற்றி மோசடியான முறையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் கட்டுநாயக்க பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் சட்டத்தரணி ஊடாக நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸாரிடம் சரணடைந்தார். இந்த நிலையில் நீர்கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டது.
கடந்த 12ஆம் திகதி கட்டுநாயக்க, வேபட பிரதேசத்திலுள்ள வீட்டில் குறித்த வர்த்தகர் தங்கியிருந்த வேளையில் அவ்வீட்டிற்குச் சென்ற இரு சந்தேக நபர்கள் பொலிஸார் போன்று நடித்து அவரிடமிருந்த 3,500 யூரோ பணத்தை அபகரித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இச்சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவருக்கும் இச்சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
13 minute ago
35 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
50 minute ago
1 hours ago