Kogilavani / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு பஸ் டிப்போவைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று நண்பகல் முதல் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாத வேதனம் இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் இப் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு- பெரியமுல்லையில் அமைந்துள்ள பிரதான பஸ் டிப்போவில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள், மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் என 300 இற்கும் மேற்பட்டவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக 48 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஐந்து பஸ்கள் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படுபவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவிக்கையில், எமது மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 8 ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த மாத வேதனம் இதுவரை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக நாங்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர சேவை சங்கத்தின் உப தலைவர் மஞ்சுள சுரேஷ் தெரிவிக்கையில் எரிபொருள் விலையேற்றமும் குறித்த திகதியில் சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்க முடியாமல் போனமைக்கு ஒரு காரணம் என்றார்.
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago