2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பொதுமக்களின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்: மாகாண அமைச்சர்

Super User   / 2012 மார்ச் 08 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா )

'"நீர்கொழும்பு மாநகர சபையின் நிதி பிரிவு புதிய இடத்தில் சிறந்த வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு தேவைகளுக்காக வருவோரின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டும" என மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா தெரிவித்தார்.

அவர்கள் தொழிலுக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து கொண்டே இங்கு வருகின்றனர். அவர்களது தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் அதற்காக பல நாட்கள் அலைய வேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் புனரமைப்பு செய்யப்பட்ட நிதி பிரிவு அலுவலகம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மேயர் அன்ரனி ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றும் போதே மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உதவியுடன் நீர்கொழும்பு நகரம் மேலும் அபிவிருத்தி செய்யப்படும்.
காமச்சோடை வாராந்த சந்தை 130 மில்லியன் ரூபா செலவிலும் நீர்கொழும்பு இரவு சந்தை 160 மில்லியன் ரூபா செலவிலும் நீர்கொழும்பு ராஜபக்ஷ பூங்காவை 1,940 மில்லியன் ரூபா செலவிலும் நவீனமயப்படுத்தப்படும். அத்துடன் 800 மல்லியன் ரூபா செலவிடப்பட்டு மைதானங்கள் புனரமைப்பு செய்யப்படும்" என அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு மாநகர சபையின் நிதி பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தின் கூரைப்பகுதி உடைந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X