Menaka Mookandi / 2012 மார்ச் 15 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் குழுத் தலைவராக மாநகர சபை உறுப்பினர் ஆராச்சிகே தொன் கெலிஸ்டர் ஜயகொடி தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் குழுத் தலைவராக இருந்த ரொயிஸ் விஜித பெர்னாந்து குற்றச் சம்பவமொன்று தொடர்பாக தற்போது விளக்கமறியலி;ல் வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, கெலிஸ்டர் ஜயகொடி அந்தப் பதவிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நீர்கொழும்பு மாநகர சபையின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த மாநகர சபை தேர்தலில் கெலிஸ்டர் ஜெயகொடி 3845 விருப்பு வாக்குகளை பெற்று ஐ.தே.க.வின்விருப்பு வாக்கு பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றிருந்தார். இதேவேளை, 5796 விருப்பு வாக்குகளை பெற்று விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாவது இடம் பெற்ற தர்மராஜ் சஜித் மோகன், மாநகர சபை உறுப்பினர் கெலிஸ்டர் ஜயகொடியை குழுத்தலைவராக நியமித்மைக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
5796 விருப்பு வாக்குகளை பெற்று விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தன்னை குழுத்தலைவராக நியமிக்காமை தொடர்பாக விளக்கம் கேட்டும், குழுத்தலைவராக தன்னை நியமிக்குமாறும் வேண்டியும் நேற்று புதன்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் தர்மராஜ் சஜித் மோகன் தமிழ்மிரருக்கு இன்று தெரிவித்தார்.
20 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
3 hours ago