Super User / 2012 மார்ச் 15 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் அமைதியானமுறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் பலப் பிரயோகம்மேற்கொண்டதாக தெரிவித்து அடிப்படை மனித உரிமை மனுவொன்றினை இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயலத் ஜயவர்த்ன மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 27 ஆம் திகதி 'சர்வதேச சதிக்கு' எதிராக கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் அரசாங்க அனுசரணையுடன் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பொலிஸ் மா அதிபரோ பொலிஸ் அதிகாரிளோ மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம், குண்டாந்தடி பிரயோகம் எதுவும் மேற்கொள்ளவில்லை என மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
இவ்விரு ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் காணப்பட்ட வித்தியாசம் ஒன்றுதான். முதலாவது ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்டது. இரண்டாவது ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது என்பது தான் அந்த வித்தியாசம் எனவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
சுயாதீன விசாரணை நடத்துவதற்கும் எதிர்கட்சி ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையை பயன்படுத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு மனுதார்கள் கோரியுள்ளனர்.
(படங்கள்: வருண வன்னியாராச்சி)




21 minute ago
1 hours ago
3 hours ago
pasha Friday, 16 March 2012 02:30 PM
நீதி கிடைக்கும் என்று நினைக்கிறீங்க.
Reply : 0 0
Kanavaan Friday, 16 March 2012 04:35 PM
ஆர்பாட்டத்தின் வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டும் கோட்டுக்குப் போயிருகிறீர்களே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
3 hours ago