Super User / 2012 மார்ச் 20 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
.jpg)
கோட்டே ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குகள் இருவர் இனந்தெரியாத நபர்களால் இன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வண. பொரலஸ்கமுவ குணரட்ன தேரர் (65), வண பிட்டிகல தினசிறி தேரர் (75) ஆகியோரே பலியானவர்களாவர். இவ்விரு பிக்குகளும் நீண்டகாலமாக இவ்விகாரையில் வசித்து வந்தவர்களாவர்.
இப்பிக்குகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார். இப்பிக்குகள் இருவருக்கும் கடும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர்.
இச்சம்பவத்தினால் கோட்டே பகுதிமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
இக்கொலைகளை புரிந்த குழுவினர் வான் ஒன்றில் விகாரைக்கு வந்ததாகவும் பின்னர் அங்கிருந்த தப்பிச் சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.
20 minute ago
1 hours ago
3 hours ago
Nesan Wednesday, 21 March 2012 06:25 AM
என்ன நடக்கிறது நாட்டில்?
Reply : 0 0
அன்பாளன் Wednesday, 21 March 2012 01:03 PM
உண்மையை சொல்லி இருப்பார்கள் ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
3 hours ago