2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

திரைப்பட கூட்டுத்தாபனத்தின் அனுமதியின்றி தமிழ் திரைப்பட 'டிவிடி' விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Super User   / 2012 மார்ச் 21 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுமதியின்றி, சட்டவிரோதமாக பிரதிசெய்யப்பட்ட இந்திய தமிழ் திரைப்படங்களின்  சி.டிகள், டிவிடிகள் ஆகியவற்றை வைத்திருந்தமை, விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான புறக்கோட்டையிலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொழும்பு நீதிமன்றமொன்று 7500 ரூபா அபராதம் விதித்துள்ளது.

புலமைச்சொத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விருவரும் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான  வழக்குரைஞர் ஜயந்த டயஸ் நாணயக்கார, தனது கட்சிக்காரர்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். எனினும் மேற்படி திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் சாட்சிகளாக ஆஜராகாமல் இவ்வழக்கை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் வாதிட்டார்.

தமது புலமைச் சொத்து உரிமைகள் மீறப்படுவதாக இத்தகைய திரைப்பட தயாரிப்பாளர்கள் எவரும் கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவ்வழக்குரைஞர் வாதிட்டார். அதன்பின் நீதிபதி மேற்படி கடை உரிமையாளர்கள் இருவருக்கம் தலா 7500 ரூபா அபராதம் விதித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X