2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி பண மோசடி செய்த இரு உக்ரைன் நாட்டவர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 மார்ச் 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


போலிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்ததாகத் தெரிவிக்கப்படும்  உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக  நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்த கலப்பதி இன்று  தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து 108 போலிக் கடன் அட்டைகள், 60,000  யூரோக்கள், 11 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணம், ஒரு மடிக்கணினி,  8 கையடக்கத் தொலைபேசிகள், தகவல்களை பதிவு செய்யும் உபகரணம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து  இச்சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாகவும் நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்த கலப்பதி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X