2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பௌத்த பிக்குகளை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 22 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டே ரஜ மகா விகாரையில் பௌத்த பிக்குகள் இருவரை கொலை செய்வதற்காக பயன்படுத்திய கத்தி விகாரைக்கு அருகிலிருந்து இன்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்திவிட்டு வீசப்பட்ட கத்தியை எம்பிலிப்பிட்டியவில் முன்னர் பௌத்த பிக்குவாக இருந்த சந்தேக நபர் காட்டியதாகவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை காலை அழைத்துவரப்பட்ட இச்சந்தேக நபர், எவ்வாறு தான் கொலை செய்தாரென்பதையும் பொலிஸாருக்கு செய்து காட்டினார்.

ஆலயத்திலிருந்து பெறுமதி வாய்ந்த புராதன வாளை திருட முற்பட்டபோதே இவர்கள் கொலை செய்யப்பட்டதாக  சந்தேக நபர், பொலிஸாரிடம் கூறினார். (எம்.எஸ்.பெரேரா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X