2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பட்டாசு வெடித்ததில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் மரணம்

Menaka Mookandi   / 2012 மே 29 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

பட்டாசுகளுக்கு லேபல் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த வயோதிபப் பெண்னொருவர் குப்பி விளக்கு வீழ்ந்து பட்டாசு வெடித்ததில் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று மரணமகியுள்ளார் என்று கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கட்டானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

23 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயாரான முத்துகலகே சோமா ரஞ்சனி என்ற 56 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் மரணத்தை தழுவியவராவார்.

பட்டாசுகளுக்கு லேபல் ஒட்டும் தொழிலை செய்து வந்துள்ள இவர், மின்சார செலவை கட்டுப்படுத்துவதற்காக இரவு வேளைகளில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் லேபல் ஒட்டுவதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வழமை போன்று வீட்டின் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் குறித்த பெண் குப்பி விளக்கு வெளிச்சத்தில் பட்டாசுகளுக்கு லேபல் ஒட்டும் தனது தொழிலை ஆரம்பித்துள்ளார்.

நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென்று பட்டாசுக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு பிள்ளைகளும் குறித்த பெண்ணின் கணவரும் ஓடி வந்து பார்த்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவர் இருப்பதை கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X