2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொட்டாஞ்சேனை விபத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க நடவடிக்கை: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தை ஏதாவது ஒரு வகையில் கையில் எடுத்துக்கொண்டு தப்பிக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ஆம் திகதி இரவு விபத்து சம்பவம் ஏற்பட்ட கூடாரங்களில் தங்கியிருந்தவர்களுக்கு இரவு உணவை நானே நேரில் சென்று வழங்கியிருந்தேன். அதிகாலை சம்பவம் இடம்பெற்றதை கேள்வியுற்றதும் உடனடியாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருந்தேன்.
கொழும்பு வடக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் கண்கானிக்கும் பொறுப்பு அரச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கே வழங்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேமன்த சி.ஓவிட்டிகம உடனடியாக செயல்பட்டார். அதனடிப்படையிலேயே காரை செலுத்தியதாக சொல்லப்படும் சந்தேக நபரின் குடும்பத்தினரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்ததன் மூலமாகவே சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

உடனடியாக நடவடிக்கைகளை எடுத்ததற்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளேன். அதேநேரம் சந்தேக நபர் வாகனத்தை தான் செலுத்தவில்லை எனவும் சாரதிக்கு அருகிலே அமர்ந்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.

சட்டத்தின் ஓட்டைகளை உபயோகித்து இவர்கள் தப்பிவிட முடியாது. சந்தேக நபர் அரச தரப்பு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய ஆதரவாளர் என்பதும் நாம் அறிவோம். எது எவ்வாறாயினும் இவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பொறுப்பதிகாரிக்கு பணித்துள்ளேன்.

எவ்வித அரசியல் தலையீடின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் அக்கறையாக உள்ளேன்; என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே போல் இவ்விபத்தில உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.'

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X