2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மோட்டார் பந்தயத்தின்போது விபத்து; இருவர் பலி

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              
(சுபுன் டயஸ்)


வென்னப்புவ, ஒவிட்டியாவத்தையில் இடம்பெற்ற மோட்டார் பந்தயமொன்றின்போது இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

போட்டியில் பங்குபற்றிய ஜீப் ஒன்று பந்தய களத்திலிலிருந்து அப்புறப்படுத்தப்படும்போது கம்பியொன்று முறிந்ததால், மேற்படி இளைஞர்கள் மீது ஜீப் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

20 வயதான அநுராத உமயாங்க என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். 23 வயதான இரேஷ் பெரோ காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்விருவரும் பாணந்துறை பிரதேசத்திலிருந்து இப்போட்டிகளை பார்வையிட வந்தவர்களாவர்.

இச்சம்பவத்தின் போது அதிர்ச்சியானால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படங்கள்: கே.என்.முனாஷா)










  Comments - 0

  • ibnuaboo Monday, 02 July 2012 11:18 AM

    இச்செய்தியின் முதல் வரிகள் பின்னுள்ள தகவலுக்கு முறைப்படி அமையவில்லை. இது இப்படி அமைந்திருக்க‌ வேண்டும் என்பது அடியேனின் கருத்து. அது, வென்னப்புவ ஒவிட்டியாவத்தயில் இடம்பெற்ற மோட்டார் பந்தயமொன்றின்போது இடம்பெற்ற விபத்தில் பார்வையாளர் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றிருந்தால் கருத்து மயக்கமில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X