2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அஸாத் சாலி ராஜினாமா கடிதத்தை கையளித்தார்

Super User   / 2012 ஜூலை 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கொழும்பு மாநகரச சபை உறுப்பினர் பதவியிலிருந்து அஸாத் சாலி ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலிடம்  இன்று மாலை கையளித்தார்.

கடந்த கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஸாத் சாலி,  கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்ததுள்ளார்.

தனது இராஜினாவையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அஸாத் சாலி,

"மூன்று முஸ்லிம் கட்சிகள் அரசுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இதனால் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை பெற முடியாது. ஏனென்றால் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு இம்முறையும் முதலமைச்சர் பதவி தரப்படும் என அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம் முதலமைச்சர் பதவியை இலகுவாக கைப்பற்றியிருக்கு முடியும். அவ்வாறில்லாவிடினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம்.

எனினும் அவற்றை மேற்கொள்ளாமல் அரசாங்கத்துடன் சங்கமித்துள்ளது. இதனாலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காகவே மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ளோம். நான் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன்" என்றார்.

அரசாங்கத்திற்கு எதிரான மனோ கணேசனுடன் தனது சமூகத்தின் நலனிற்காக அமைச்சர் தொண்டமானினால் இணைந்து போட்டியிட முடியும் என்றால், ஏன் அரசாங்கத்திலுள்ள குறித்த மூன்று முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்களினால் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காக போட்டியிட முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியிருக்கலாமே என ஊடகவியலாளரொருவர் வினவிய போது,

"தாக்கப்பட்ட தம்புள்ளை பள்ளிவாசல் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக உள்ளது என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்த போது, சுமார் 2 வருடங்களுக்கு முன்னரே குறித்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்தவிடம் எவ்வாறு இது தொடர்பில் பேசுவது" என பதிலளித்தார்.

அத்துடன், இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அஸாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • nafa Tuesday, 17 July 2012 11:55 AM

    வாருங்க நீங்களும் சேர்ந்து குதியுங்க.

    Reply : 0       0

    sharmeee Tuesday, 17 July 2012 12:23 PM

    இருக்கும் தலைவலி போதும் ஆசாத் சாலி.....எங்கிட பிரச்சினையை நாங்க பாப்போம்......ஐயா.

    Reply : 0       0

    ஜதார்த்தவாதி Tuesday, 17 July 2012 02:58 PM

    ஒங்களையும் வச்சி எப்படியோ கிழக்கு முஸ்லிம்களின் ஓட்டுகளை எல்லாம் சிதறடிக்கணும் என்னு ஒங்க தலைவர் நினைச்சிட்டாரு போலும் அதுதான் சுயட்சையா ஒங்கள களமிறக்குறார் போலும்!

    Reply : 0       0

    Mohammed Hiraz Tuesday, 17 July 2012 04:20 PM

    வாழ்வுக்கும் மறக்காத அவமானத்தை சுமக்க முடிவு செய்திட்டீங்களா என்ன??? உங்களுக்கு அங்கே ஆயிரம் வாக்குகள் விழுவது கூட கடினம்!!! உருப்படியா கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுகென தனியான கட்சி ஒன்றை ஆரம்பித்து கொழும்பு வாழ் முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவாருங்கள். ஐசுமக்க கிய தேசிய கட்சி என்றும் சுதந்திர கட்சி என்றும் கொழும்பு முஸ்லிம்கள் பிரிந்து நின்று என்ன இலாபத்தை கண்டார்கள் இனியாவது இலாபம் அடையும் வழியை காட்டுவீர்களா? அதை விடுத்து நீங்க யார் என்றே அறியாத ஊருக்கு போய் என்ன பிரயோஜனம்???

    Reply : 0       0

    saeel Tuesday, 17 July 2012 04:35 PM

    பாராட்டுகள் நீங்கள் வெளிப்படையாக பேசுகிரீர்கள். ஆனால் சில முஸ்லிம் அமைச்சர்கள் தம்புள்ள பள்ளி தாக்கப்படவில்லை, அது பொய் என அறிக்கை விட்டிருந்தார்கள். இன்னும் எத்தனையோ முஸ்லிம்களிற்கு எதிரான சதிகளிற்கு துணை போகின்றார்கள்.

    Reply : 0       0

    Kanavaan Tuesday, 17 July 2012 05:19 PM

    தம்பி அசாத், உங்களுக்கு இருக்கிற சமூக உணர்வு மற்றைய முஸ்லிம் தலைவர்களைவிட சற்றுக் கூட. இருந்தாலும் எப்படித் தம்பி உங்களை நம்புவது? உங்களையும் அவர்கள் ஏமாற்றக்கூடுமல்லவா?

    Reply : 0       0

    guru Wednesday, 18 July 2012 02:54 AM

    வாழ்த்துக்ககள்.

    Reply : 0       0

    Munazil marikkar Wednesday, 18 July 2012 11:32 AM

    நல்ல முயற்சி பாராட்டுகள்.

    Reply : 0       0

    niyazcader Tuesday, 31 July 2012 12:45 PM

    நல்ல முயற்சி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X