2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு இ.போ.ச. பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 17 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


வழங்கப்படாதுள்ள தங்களது இரண்டு மாத சம்பளத்தை  உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி  நீர்கொழும்பு இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நீர்கொழும்பு, பெரியமுல்லை பஸ் டிப்போவின் முன்றலில் ஒன்றுகூடிய இவர்கள் சம்பளம் வழங்கப்படாமைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் தாங்கள் பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனால் தங்களது
குடும்பத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு போக்குவரத்துச்சபை பஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

பஸ் டிப்போ நிர்வாகம் தலா ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபா சம்பளத்தை முற்பணமாக வழங்க முன்வந்தபோதும், தாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் நீர்கொழும்பு போக்குவரத்துச்சபை பஸ் ஊழியர்கள் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X