2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டம் நீர்கொழும்பில் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நுளம்புகளை ஒழிப்பதற்கான வேலைத்திட்டமொன்று நீர்கொழும்பு மாநகரசபை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
'நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை நீர்கொழும்பிலிருந்து ஆரம்பிப்போம்' என்ற இத்திட்டத்திற்காக   2,000 பெண்கள் சுயேட்சையாக சேவையில் ஈடுபட தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் நிமல் லான்சா  தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக 75 இலட்சம் ரூபா நிதி மேல்மாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு மாநகரசபை இதற்கான பங்களிப்பளித்துள்ளதாகவும் பொதுசுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.  25,000 வீடுகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள பி.ரி.ஐ பற்றீரியா அடங்கிய பொதிகள்  விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேல்மாகாண அமைச்சர் நிமல் லான்சாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேல்மாகாண அமைச்சர்களான உதய கம்மன்பில, ஜகத் அங்ககே, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மாநகரசபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நீர்கொழும்பு வலயக் கல்வியதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X