2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இனப்பிரச்சினை தீர்வுக்காக இடதுசாரி அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்: பி

Super User   / 2012 ஜூலை 31 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திலுள்ள இடதுசாரி அமைச்சர்கள் இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும் அழுத்தத்தை மேலும் அதிகரிக்க வேலைதிட்டங்களை முன்வைக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

அரசாங்கத்திலுள்ள இடதுசாரி அமைச்சர்களான திஸ்ஸ விதாரன,   டீ.யூ. குணசேகர, மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரை அவர்களின் அமைச்சில் கடந்த திங்கட்கிழமை; சந்தித்து கலந்துரையாடிய பிரபா கணேசன் எம்.பி. இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

"யுத்தம் முடிவுற்று மூன்று வருட காலமாகியும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அரசாங்கம் எவ்விதமான தீர்வையும் நோக்கி செல்லாததையிட்டு அமைச்சர்கள் மூவரும் என்னிடம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அது மட்டுமின்றி கடந்த கால சர்வ கட்சி மாகாநாட்டின் மூலமாக கிடைக்க பெற்ற ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தாமையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தாமல் இருந்தமைக்கும் தான் மனம் வருந்துவதாக தெரிவித்தனர்.

இருப்பினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக முதல் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் அரசாங்கத்திற்கு அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலரை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை சம்பந்தமான விசேட தீர்வு திட்டத்தை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்  எனது முழு ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். இம்மூன்று அமைச்சர்களையும் வேறு சில அரச பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்விற்கான ஒரு குழுவாக முன்னெடுப்பதற்காக வெகு விரைவில் செயல்படவுள்ளேன்.

அதே சமயம் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் சம்பந்தமாக தமது அமைச்சின் மூலமாக அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரதியையும் என்னிடம் கையளித்தார். இந்த அறிக்கையில் தமிழ் மொழி அமுலாக்கம் சம்பந்தமான பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுவது மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது' என்றார்.

இச்சந்திப்பில் ஜனநயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் நிர்வாகச் செயலாளர் என். ரவிகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X