2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

'கொழும்பு மாநகர சபையின் செங்கோல் சபை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது'

Super User   / 2012 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட, கொழும்பு மாநகர சபையின் செங்கோல் திருப்பி ஒப்படைக்கப்பட்டால் அது மீண்டும் சபை சபை மண்டபத்திற்குள்  அனுமதிக்கப்படமாட்டாது என பிரதிமேயர் டைட்டஸ் பெரேரா கூறியுள்ளார்.

செங்கோல் எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டால் மாத்திரமே அச்செங்கோல் மீண்டும் சபைக்குள் அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

"இச்செங்கோலை நிரந்தரமாக சபை மண்டபத்திற்கு வெளியே வைத்திருப்பது தொடர்பான பிரேரணையொன்று, ஓகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தின்போது முன்வைக்கப்படும். கூட்டம் நடைபெறுவதற்கு இச்செங்கோல் அவசியமில்லை" என அவர் கூறினார்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்  ரோய் போகாவத்த இது தொடர்பாக கூறுகையில், "அது மாநகர சபை உறுப்பினர்கள் எவரினதும் சொத்து அல்ல. மாநகர சபையை நடத்துவதற்கு அது அவசியம். செங்கோல் மீண்டும் கொண்டுவருவதற்கு அனுமதிக்கப்படாவிட்டால், மேயருக்கம் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிராக நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார். (ஐ.எஸ்.ஏ.)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X