2026 ஜனவரி 21, புதன்கிழமை

கம்பஹா நீதிமன்றில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நீதிமன்றத்தில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக  119 என்ற பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகளும் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் பொலிஸார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர். 

கம்பஹாவில் உள்ள  'கப்ருக' என்ற  புடவைக்கடையின் உரிமையாளரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும்   கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு புத்தகங்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருந்தன.(தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X