2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பாணந்துறை கடலில் மூழ்கும் கப்பலின் எண்ணெய் கசிவு நீர்கொழும்பு கடற்பரப்பில்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

பாணந்துறை கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு எண்ணெய்க் கப்பலிலிருந்து கசிந்துள்ளதாகக் கருதப்பபடும் எண்ணெய், நீர்கொழும்பு - பிட்டிபனை - மோரவல கடற்கரைகளிலும் காணப்படுவதாக மீனவர்கள் உட்பட பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து இன்று காலை மோரவல கடற்பகுதிக்கு நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பி.ஆர்.டி.அலவத்த, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்  மற்றும் சுற்றாடல் அதிகாரிகள் விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இந்த எண்ணெய்க் கசிவு பாணந்துறை கடலில் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு கப்பலிலிருந்து வெளியாகியுள்ள எண்ணெய்க் கசிவாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X