2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முன்னாள் அமைச்சர் மென்டிஸின் பூதவுடலுக்கு எதிர்கட்சித் தலைவர் அஞ்சலி

Super User   / 2012 செப்டெம்பர் 03 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே. என்.முனாஷா)


காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் விஜேபால மென்டிஸின் பூதவுடலுக்கு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்க இன்று திங்கட்கிழமை நண்பகல் அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது,காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் விஜேபால மென்டிஸின் மனைவியிடம் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க தனது துக்கத்தை தெரிவித்தார்.

இதேவேளை, இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரும் முன்னாள் அமைச்சர் விஜேபால மென்டிஸின்  பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்கு எதிர்வரும் புதன்கிழமை மாலை நீரகொழும்பில் இடம்பெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .