2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தென்னாபிரிக்கவுடன் இணைந்து கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களின் கைத்தொழிற்துறைகளை தென்னாபிரிக்க அரசுடன் இணைந்து மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு, மருதாஇனையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களின் செயற்றிட்டங்களை மஹிந்த சிந்தனைக்கு அமைவாக மென்மேலும் மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதன்பிரகாரம் கைத்தொழில், சிறுதொழில், சிறுகைத்தொழில் துறைகளுடன் கைத்தொழில் பேட்டைகளை அபிவிருத்தி செய்வது, பனை, கித்துள் மற்றும் மீன்வலை சார்ந்த உற்பத்திகளை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதுடன், குறிப்பிட்ட செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் மென்மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்தெடுப்பது போன்ற விடயங்களிலும், கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களினது உற்பத்திகளை தென்னாபிரிக்க நாட்டின் உற்பத்திகளுக்கு இணையாக உற்பத்தி செய்வதற்கு தமது முழுமையான பங்களிப்பு வழங்கப்படுமென தென்னாபிரிக்க அரசுப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

தென்னாபிரிக்காவின் வியாபார அபிவிருத்தி கூட்டமைப்பின் பங்கேற்றலுடன் நடைபெற்ற இன்றைய கலந்துரையாடலின் போது அந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் தலைமையிலான குழுவில் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் மற்றும் ஏனைய வியாபார அரச துறை சார்ந்த பிரமுகர்கள், வெளிநாட்டு அமைச்சின் பிரதிநிதிகள், வர்த்தகசம்மேளனப் பிரதிநிதிகள், கைத்தொழிற் பேட்டை சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராஜசிங்கம் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .