2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பில் வாகனத்திலிருந்து சடலம்மீட்பு

Super User   / 2012 செப்டெம்பர் 11 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஹவலொக் டவுனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரொன்றிலிருந்து சடலமொன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கையில்...

இன்று மாலை 5 மணியளவில் எமக்கும் கிடைத்த தகவலொன்றின்படி கொழும்பு, ஹவலொக் டவுனில் அமைந்துள்ள தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற காரொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை கண்டெடுத்தோம்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் ஹொரணை, மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 60 வயதான நிமால் காமினி ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரண விசாரணைகளை புதுக்கடை நீதவான் மேற்கொண்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X