2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடக பயிற்சிப்பட்டறை

Super User   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையதளங்கள், வலைப்பூக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆர்வமுடைய இளைஞர் யுவதிகளை இனங்கண்டு அவர்களை முறையாக பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் திட்டமிட்டுள்ளது.

நவீன உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் சமூக ஊடகத்துறையில் வினைத்திறனுடன் செயற்பட கூடிய வகையில் இளைஞர் யுவதிகளை பயிற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள இப்பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர் யுவதிகள் தமது பெயர் விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் றிப்தி அலிக்கு 0773630668 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது rifthy.ali@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ எதிர்வரும் ஒக்டோபார் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியும்.

இந்த பயிற்சிப்பட்டறைகளில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளதுடன் பங்குபற்றுவோருக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X