2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பரிசில்கள் அள்ளி வழங்கும் வாமியின் கட்டுரை போட்டி

Super User   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை நோக்காக கொண்டு கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற வாமி நிறுவனம் இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் நோக்கில் வரலாற்றை தொகுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வரலாற்று தொகுப்பை மேற்கொள்வதற்கு பெறுமதியான பரிசில்களை அள்ளி வழங்கும் ஒரு கட்டுரை போட்டியொன்றை வாமி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கட்டுரை போட்டி தொடர்பான ஒழுங்கு விதிகள் பின்வருமாறு:


1.    வயதெல்லை கிடையாது.
2.    தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் ஏதாவதொன்றில் கட்டுரை அமையலாம்.
3.    கட்டுரையின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அதற்காக பயன்படுத்தப்பட்ட உசாத்துணைகள் குறிப்பிடப்படல் வேண்டும்.
4.    லங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் இடம்பிடித்த பிரபலங்கள் கட்டுரையின் தலைப்பாக அமைய வேண்டும். (குறிப்பு: பிரபல்யம் குறைந்தவர்கள் தொடர்பாக எழுதப்படும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)
5.    போட்டிக்காக எழுதி அனுப்பப்படும் கட்டுரைகள் அனைத்தினதும் பதிப்புரிமை வாமி நிறுவனத்துக்குரியதாக கருதப்படும்.
6.    முதல் மூன்று இடங்களுக்கான பரிசில்களாக முறையே ரூபா பத்தாயிரம், ஏழாயிரம், ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இது தவிர பெறுமதியான ஆறுதல் பரிசில்கள் பத்தும் தெரிவு செய்யப்படவுள்ளன.

கட்டுரைகள் அனைத்தும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் 658/83, மாவில கார்டின்ஸ், கொழும்பு – 09 என்ற வாமி காரியாலயத்துக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது wamysl_media@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பிவைக்கலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X