2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் நகைக்கடையில் கொள்ளையிட்டு தப்பிச்செல்ல முயன்ற சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள நகைக் கடையொன்றில் புகுந்து கத்திமுனையில்  நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்செல்ல முயன்ற போது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 6.30 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள நகை கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் ஜா-எல பிதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் விசாணைகளின் போது தெரியவந்துள்ளது.

தான் தினமும் 1500 ரூபாவுக்கு போதைப்பொருள் பாவிப்பவர் எனவும். போதைப் பொருள் வாங்க பணம் தேவைப்பட்டதன் காரணமாகவே இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளார்.

நேற்று இரவு நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள நகை கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிள்; ஒன்றில் வந்த இரு நபர்களில் ஒருவர் திடீரென நகைகடைக்குள் புகுந்து அங்கு விற்பனைக்காக வாடிக்கையளர்களுக்கு காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த நகைகளை கத்தி முனையில் கொள்ளையிட்டுள்ளார்.

பின்னர் அந்த நபர் வெளியில் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த நபருடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன் போது கடை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளை செல்லவிடாது தடுத்துள்ளார்.

இந்நிலையில் நகையை கொள்ளையிட்ட நபர் ஒடி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன் போது பொதுமகன் ஒருவர் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் பிடிப்பட்ட நபரை நையப் புடைத்து பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தப்பியோடிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X