2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வாழைத்தண்டில் படகு கட்டி விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி மரணம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

மழை நீரில் வாழைத் தண்டில் படகு கட்டி விளையாடிய சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி இன்று காலை பலியாகியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 9.30 மணியளவில் நீர்கொழும்பு – நுகவெல மகா உனுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லுரியில் கல்வி பயிலும் 13 வயதுடைய எம்.துமிந்த குசல என்ற சிறுவனே சம்பவத்தில் பலியானவராவார்.

இன்று தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதன் காரணமாக சிறுவன் பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து அயல் வீடொன்றில் வைத்து வாழை மரத்தண்டினால் படகு செய்து வெள்ள நீரில் படகு விளையாடிய போது மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளததாகவும் அந்த வீட்டின் வேலியில் உள்ள கொங்ரீட் துணில் பாதுகாப்பற்ற முறையில் மின்சார சபையினால் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தின் மின்சார இணைப்பை சிறுவன் படகு விளையாடுகையில் தண்ணீரில் விழப்போன போது தொட்டுள்ளதாகவும் அதன்போது மின்சாரம் தாக்கியுள்ளதாகவும் உறவினர்களும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொட்ரபாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X