2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த நபருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக நடந்துகொண்ட ஒருவருக்கு 3 மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை மதுபோதையில் நீதிமன்றத்திற்கு வந்த இந்நபர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்நபரை சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது அருந்திவிட்டு எஞ்சிய மதுபானத்துடன் போத்தல் ஒன்றையும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X