2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காரிலிருந்து சடலம் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி, மெரின் டிரைவ் கடற்கரை வீதியில் காரொன்றிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தவரே கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவல் நிறத்திலான பெரோதுவா வீவா எலைட் ரக கார் ஒன்றிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. புத்தம்புது காரான இதை கொள்ளையிட முயன்றவர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளையர்களுக்கும் மரணமடைந்தவருக்கும் இடையில் கடும் போராட்டம் இடம்பெற்றுள்ளமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்த பம்பலப்பிட்டி பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X