2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மாலி நாட்டவருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

மாலி நாட்டவர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

வெளிநாட்டு பணம் அல்லது பெறுமதியான பொருள் இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை இரவு வேளையில் பலகத்துறை எமில்டன் கால்வாயில் வீசியமை தொடர்பான குற்றச்சாட்டிலேயே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான வெளிநாட்டவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பலகத்துறை எமில்டன் கால்வாயில் பெட்டகத்தை வீசியுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதி ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக அறிவித்ததை அடுத்து பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த பெட்டகத்தை மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

14 அங்குலம் நீளமானதும் 8 அங்குலம் அகலமானதுமான குறித்த பெட்டகம் தண்ணீர் உட்புகாமல் இருக்க சுற்றி வர டேப் இடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று நிர்கொழும்பு பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போதே டிசம்பர் 10ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர் விசா இன்றி நாட்டில் தங்கியுள்ளதாகவும் ஏத்துக்கால பிரதேசத்தில் வைத்து கைது செய்ப்பட்டதாகவும் பெரிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X