2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

'குடல் வெடித்து மலம் இறுகியதால் குழந்தை பலி'

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல் காரணமாக குடல் மற்றும் உறுப்புகள் வெடித்து மற்றும் மலம் இறுக்கியதால் பிலியந்தலையைச் சேர்ந்த ஒன்றரை வயது கைக்குழந்தை மரணமடைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தந்தையின் கொடூரமான தாக்குதலினால் ஒன்றை வயது குழந்தை நேற்று மரணமடைந்துள்ளதுடன். குழந்தையின் தந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த கைக்குழந்தையின் சடலத்தை பாட்டியிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதேவேளை குழந்தையின் மரணத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாயை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X