2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பிரபா கணேசனும் ஆதரவாக வாக்களிப்பார்

Super User   / 2013 ஜனவரி 07 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல திருத்தங்களுடனும் நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸின் உயர்மட்டக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக  ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"திவிநெகும சட்டமூலம் பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தாலும் அடிமட்ட மக்களின் நல்வாழ்விற்கு அவசியமான ஒரு சட்ட மூலமாகும். இச்சட்ட மூலம் கொண்டுவரப்பட்டு சகல தரப்பினரதும் அபிப்பிராயங்கள் பெறப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் போன்ற கட்சிகளின் அபிப்பிராயம் அண்மையில் பெறப்பட்டன.

இதனடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலையக தோட்டங்களும் திவிநெகும மூலமாக நன்மை பெறக்கூடிய  வழிவகைகள் இத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டது" என்றார்.

  Comments - 0

  • Kumar Monday, 07 January 2013 02:09 PM

    எது வந்தாலும் மக்களுக்கு பயன்படாது பயன்படுத்தவும் மாட்டார்கள் இது அனைவரும் தெரிந்த உண்மை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X