2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பெஸ்டியன் மாவத்தையில் பழைய கடைகள் அகற்றப்பட்டன

Kanagaraj   / 2013 ஜனவரி 28 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பழைய கடைகள் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அகற்றப்பட்டன.

கொழும்பு நகரத்தை அழகுபடுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு கட்டமாகவே இந்த கடைகள் சற்று முன்னர் அகற்றப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அடுத்தே குறிப்பிட்ட கடைகள் அகற்றப்பட்டன.

குறிப்பிட்ட கடைகளை அகற்றுமாறு கடைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இன்றுவரையிலும் காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பழைய கடைகள் அண்மையில் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X