2025 ஜூன் 23, திங்கட்கிழமை

போலி வைத்தியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 01 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


நீர்கொழும்பு அக்கரபனஹ பிரதேசத்தில் தனது மருந்தகத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த போலி வைத்தியருக்கு எதிராக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அருகில் இன்று வெள்ளிக்கிழமை எதிர்;ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நீர்கொழும்பு டொன் பொஸ்கோ நிலையத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டொன் பொஸ்கோ நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை இயூ அன்ரனி பிந்து உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மதத்லைவர்கள் மற்றம் இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தி;ல் கலந்து கொண்டனர்.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான வைத்தியர் இன்று நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்ட போது, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்என்.பி.அமரசிங்க பெப்பரவரி 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு, அக்கரபனஹ பிரதேசத்தில் தனது மருந்தகத்தில் போதை மருந்து பொருள் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அஜித் விபுல பண்டார என்ற வைத்தியர் கடந்த மாதம் 19ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.    

மருந்தகம் என்ற பெயரில் இயங்கி வந்த போதைப் பொருள் விற்பனை நிலையம் கடந்த  மாதம் 19ஆம் திகதி இரவு சுற்றி வளைக்கப்பட்டு அஜித்; விபுல பண்டார என்ற சந்தேக நபரான வைத்தியர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்படார்.

இந்த மருந்தகத்தில் போதைப் பொருளுக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும் சூடோல் மாத்திரை உட்பட போதை மாத்திரைகள் இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

போதை மாத்திரைகள் வாங்குவது போன்று சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அனுப்பி நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்திருந்தனர். இதன் போது கருக்களைப்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அடையாள அட்டைகள் பொலிஸாரால் கைபற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .