2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மூன்று மாடி கட்டடத்தில் தீ: பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பில் அமைந்துள்ள கணினி கல்வி நிலையம்  மற்றும் ஆங்கில மொழி பயிற்சி நிலையம் உட்பட மேலும் சில வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டடத்தில்  நேற்று (18) இரவு ஏற்பட்ட தீ விபத்தில்  பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  எரிந்து நாசமாயுள்ளன.

நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் முன்பாக ரயில் பாதைக்கு அண்மையில் அமைந்துள்ள  'டிஜி டெக்' நிறுவனத்தினால்  நடத்தப்படும்  கணனி பயிற்சி வகுப்பு மற்றும் ஆங்கில மொழி பயிற்சி நிலையம்   (பிரிட்டிஸ் வே இங்லிஸ் அக்கடமி) , கூட்டுறவு காப்புறுதி ஸ்தாபனம், கணனி உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம்,  ஆகியன அமைந்துள்ள  கட்டடத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றது.

இத் தீ விபத்தின்; காரணமாக கட்டிடத்தின் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகளுக்கே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாடிகளில் அமைந்திருந்த கணினி பயிற்சி வகுப்பு மற்றும் ஆங்கில மொழி பயிற்சி நிலையங்களில் இருந்த கணினிகள் தளபாடங்கள் உட்பட பல இலட்சக் கணக்கான ரூபாய் பெறுமதியான  உபகரணங்களுக்கும் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கட்டிடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள கூட்டுறவு காப்புறுதி ஸ்தாபனம், கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிலையம் என்பவற்றிற்கு சேதம் ஏற்படவில்லை.

தீ சம்பவம் ஏற்பட்டவுடன் நீர்கொழும்பு மாநகர சபையின் தீ அணைப்புப் படைப் பிரிவினர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10.30 மணியளவில்  தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்து காரணமாக ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை என்று கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தீ சம்பவம்  கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள மின்சார ஒழுக்கின் காரணமாகவா அல்லது வேறு காரணங்களினால் ஏற்பட்டதா என்பதை  அறிய நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X