2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

காப்புறுதிக்கம்பனிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


வாகன விபத்துக்கு உரிய நட்டஈட்டுக் காப்புறுதித் தொகையை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் காப்புறுதி (Union Assurance)நிறுவனத்திற்கு எதிராக புதன்கிழமை (06) நண்பகல் நீர்கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இரண்டு நவீன ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் வாகன உரிமையாளர்களால் அந்த வாகனங்களுக்காக காப்புறுதி நட்டஈடு கோரப்பட்டுள்ளது. குறித்த காப்புறுதி நிறுவனம் அந்த வாகன விபத்துக்காப்புறுதி விண்ணப்பத்தை நிராகரித்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சேதமடைந்த வாகனத்தை டிப்பர் வண்டியில் ஏற்றி வந்து நீரகொழும்பு சாந்த ஜோசப் வீதியில் அமைந்துள்ள குறித்த காப்புறுதி நிறுவனத்திற்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர். அத்துடன் சுலோக அட்டைகளை நிறுவனத்திற்கு செல்லும் வாயிலின் முன்பாக வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, குறித்த காப்புறுதி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக முகாமையாளரான நிஹால் அத்துகேயிடம் இது தொடர்பாக வினவிய போது, குறித்த இரண்டு வாகனங்கள்; தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினைப் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையிலேயே அந்த வாகனங்களுக்கான விபத்துக் காப்புறுதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்த காப்புறுதிக் கோரிக்கையாளர்கள் இது தொடர்பில் நீதிமன்ற உதவியை நாட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதோடு வாகனப் போக்குவரத்தையும் சீர் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X