2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

விஷேட தேவையுடையவர்களுக்கு உதவும் சிவன் அறக்கட்டளை

Thipaan   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பா. திருஞானம், பேரின்பராஜா திபான்


சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட சித்த ஆயர்வேத மருத்துவம் மூலம் விஷேட தேவையுடைய நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்திவரும் சிவன் விஷேட தேவையுடையோர் நிலையம் கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.

இந் நிலையத்தின் சேவைகள் தொடர்பாக விளக்கமளிக்கும்  ஊடகசந்திப்பு கொழும்பு கலதாரி ஹோட்டலில் வியாழக்கிழமை (11) நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜகிரிய உடவத்த விமலபுத்தி தேரர், சட்டத்தரணி எம்.கே.பி. சந்திரலால், வைத்தியர் யஷந்த வடுகொடபிட்டிய மற்றும் சிவன் அறக்கட்டளை நிலைய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த நிலையம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

சிவன் அறக்கட்டளை நிலையம் தொடர்பாக அந் நிலையத்தின் ஸ்தாபகர் கணேஷன் வேலாயுதம் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகனான சிவன், பிறக்கும் போது விஷேட தேவையுடைய குழந்தையாகவிருந்தார் அவர் 24 வாரங்களில் பிறந்த குழந்தையாவார்.
அவரை குணப்படுத்த உலகத்தில் உள்ள பெரும்பாளான நாடுகளுக்கு சென்றேன் பல்வாயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்தேன் பயனில்லை. பின் சித்தமருத்துவத்தின் மூலம் இவருக்கு சிகிச்சையை தொடர்ந்தேன் ஓரளவு சிகிச்சை பயனளித்துள்ளது.

நான் எனது மகனை வைத்துக் கொண்டுபட்ட கஷ்ட்டம் வேருயாருக்கும் ஏற்படக் கூடாது. இதனால்தான் இலங்கையிலுள்ள ஏழை மக்களுக்கும் உதவ முன்வந்துள்ளேன்.

விஷேட தேவையுடையோரும் மனிதர்களே, அவர்களுக்கும் சகல உரிமைகளும் உண்டு. அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள். தற்போது அவர்களை கண்டால் ஏளனமாக பார்க்கும் சமூகம் நம்மிலும் உள்ளனர். இந் நிலைமாற வேண்டும்.

நான் லண்டனில் வியாபாரம் செய்துவருகின்றேன். வருமானத்தில் ஒருபகுதியை இந்தசேவைக்கு ஒதுக்கியுள்ளேன். இது அரசசார்பற்ற நிறுவனம் அல்ல. எனது சொந்த பணத்தில் இந்தசேவையை எனது மகனான சிவனின் பெயரில் சிவன் விஷேட தேவையுடையோர் பாடசாலையையும் மருத்துவ சேவையையும் ஆரபித்துள்ளேன்.

எனவே தான் இந்த மருத்துவத்தை இந்தநாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் சிங்களம், தமிழ், முஸ்லிம் பேதமின்றி விஷேட தேவையுடையோரை மையமாக கொண்டு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றேன்.

அதனால் தான் நான் அனைத்து இன மக்களும் வாழும் கண்டியை மையமாகக் கொண்டு எனது சேவையை ஆரம்பித்துள்ளேன்.

தற்போது மாத்தளை உக்குவல, பன்விலமடுல்கல்ல தோட்டம். கண்டிதெல்தெனிய, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் கிளைகள் ஆரபிக்கப்பட்டு 250 பேருக்கு சிகிச்சைகள் நடைபெற்றுவருகின்றது.

தொடர்ந்து எதிர்காலத்தில் மேலும் கிளைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கு உங்களின் ஒத்துழைப்புக்களை  எதிர்பார்கின்றேன்.

தற்போது இந்தநாட்டில் சித்த வைத்தியத்துக்;கான அங்கிகாரம் அதிகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற, உலக விஷேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு தெல்தெனிய கிளையில் நடைபெற்ற நிகழ்வில்  கண்டி அஸ்கிரியமற்றும் மல்வத்து பீடாதிபதிகள் கலந்து கொண்டு இந்த வைத்தியத்துக்கும் விஷேட தேவையுடையோருக்கும் ஆசீர்வாதம் அளித்துள்ளனர்.

அதேவேளை இலங்கையின் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியரான டி.குமுதரஞ்சனியின் ஆலோசனைகளும் வழிக்காட்டலும் முறையாக கிடைக்கப்பெற்று வருகின்றது.

இவரே தேவையான ஆயர்வேதமருந்துகளை வினியோகித்து வருகின்றார.; இவரிடம் ஆயர்வேத கல்வி பயின்ற வைத்தியர்களே சேவை நோக்கம் கொண்டு வைத்திய சேவைசெய்து வருகின்றனர்.  இந்தசந்தர்பத்தில் இவர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

அத்துடன் பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சியூட்டும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளேன். தோட்ட தொழிலாளர்கள் திறமையானவர்கள் அவர்களை முறையாக வழி நடாத்தினால் அவர்கள் முன்னேறுவார்கள். அதைநான் நிரூபித்துகாட்டவுள்ளேன். அதற்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் என்றும் கூறினார்.

அந்தவகையில் இந்தநிலையத்தின் ஊடாகவோ அல்லது தங்களது பிரதேசத்தில் இது போன்ற ஒன்றை உருவாக்க இந்த அமைப்பை தொடர்பு கொண்டு தங்களது தோட்டங்களில் உருவாக்குவதன் ஊடாகவோ, விஷேட தேவையுடையோரின் பிரச்சனைகளுக்கு தீர்வுகான முடியும்.
எனவே, இந்த சேவையை இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் ஆரம்பிப்பதற்கு நான் தயார், எங்களது காரியாலயத்தை தொடர்புகொள்ளவும் (0770399335) நிச்சயம் எனது சேவைதொடரும் என்றார்



 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X