2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

களப்பில் விழுந்து இளைஞன் மரணம்

Kanagaraj   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு களப்பில் விழுந்த முன்னக்கர எனுமிடத்தைச்சேர்ந்த 17 வயதான துமிந்த சாந்த பெர்னாண்டோ என்ற இளைஞன் மரணமடைந்துள்ளார் என்று நீர்கொழும்பு வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தையொட்டி பொம்மைகளை வைப்பதற்கான குடிகளை அமைக்க தேவையான மண்ணை சேகரிக்க சென்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இளைஞனுடன் ஐந்து இளைஞர்கள் சென்றதாகவும் அவர்கள், களப்புக்கு அண்மையுள்ள பாலத்துக்கு மேலிருந்து களப்புக்குள் பாய்ந்து மண்ணை எடுப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

களப்புக்குள் பாய்ந்த மேற்படி இளைஞனின் கால் இழுத்து பிடித்துகொண்டுள்ளது. இதனால், அவ்விளைஞன் நீந்த முடியாமல் தவித்துள்ளான். உடனடியாக அவ்விளைஞனை காப்பாற்றிய ஏனைய இளைஞர்கள் அவரை, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பலனக்காத நிலையிலேயே அவர் நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X