Kogilavani / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
பிரபல நடிகரும் பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா தொடர்ந்துள்ள வழக்கு திங்கட்கிழமை(23) நீர்கொழும்பு, மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, இவ்வழக்கை நீதவான் ஏ.எம்.எம்.பி.அமரசிங்க எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
தன்மீது அவதூறாக உரையாற்றியும் கருத்துக்கள் தெரிவித்தும் வந்தமைக்கு எதிராக பிரபல நடிகரும் பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா வழக்கு தாக்கல் செய்தால்.
இவ்வழக்கு திங்கட்கிழமை இரண்டாவது தடவையாக விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
தனக்கு தனிப்பட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரதிவாதியான பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தமைக்கு எதிராக முறைப்பாட்டாளரான மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த முறைப்பாடு தொடர்பாக பதில் தெரிவிக்க பிரதிவாதிக்கு அனுமதி வழங்குமாறு கேட்டபோதே நீதவான் இந்த வழக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்ககு எடுப்பதாக உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .