2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சிறந்த தபால் சேவை முன்னெடுக்கப்படும்

Princiya Dixci   / 2015 மார்ச் 11 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்திட்டங்களிலிருந்து ஒரு படி மேலே சென்று சிறந்த தபால் சேவை நம் நாட்டு மக்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபாற்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.

43 மில்லியன் ரூபாய் செலவில் அவிசாவளையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையக் கட்டடத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அவிசாவளை, சீதாபுர நகரம் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகும். கடந்த காலங்களில் மாகாண சபையில் இரு தடவைகள் அமைச்சராக இருந்து மக்களுடன் நெருங்கி சேவையாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. அந்த அனுபவத்தால் எல்லாத் தரப்பிலுள்ள தொழிற் சங்கங்களுடனும் சம வாய்ப்புடன் பழகி அவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணி செயற்படக் கூடிய தன்மை இருந்தபடியாலேயே எனக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்தது. 

எனவே, எதிர்காலத்தில் மக்களுக்கு தபாற்துறை சேவையின் மூலமாக சிறந்த பயனை வழங்குவதற்கு முன்மாதரியான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளோம். இந்த தபால் நிலையத்தின் கீழ் 46 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவற்றை மேலும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X